ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் மஹதி அகுவவீதி, ஐநா.,வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் ‘இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு’ உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் மையப் புள்ளியாக பணியாற்றுவார்.
மஹதி இவ்வமைப்பின் தலைமைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதன் மூலம், சர்வதேச அளவில் பூமி, மனித ஆரோக்கியத்தின் முக்கியமான அம்சமாக ‘வளமான மண் மற்றும் விவசாயம்’ அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட உள்ளார்.
மஹதி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சர்வதேச வளர்ச்சி துறையில் நிலைத்தன்மை, பொது சுகாதாரம், அகதிகள் ஆதரவு ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தற்போது மண் காப்போம் இயக்கத்தின் கொள்கை மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த பொறுப்பு குறித்து அவர் கூறுகையில்: நமது மண்ணின் ஆரோக்கியம், பூமி மற்றும் சமூகங்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. இந்தப் பொறுப்பின் மூலம், மண் வள மேம்பாட்டிற்கு உடனடியாகத் தேவைபடும் கவனத்தையும் வளங்களையும் பெறுவதை உறுதி செய்ய, உலகளவில் இளைய தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் எனக் கூறினார்.