கோவை விமன்ஸ் பாலிடெக்னீக் கல்லூரி சிக்னல் வழியே காந்திபுரம் செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன்னதாக குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்டது. அதன் பின்னர் தோண்டப்பட்ட அந்த பகுதி சீரமைக்கப்பட்டது.

ஆனால் அங்கு பயன்படுத்தப்பட்ட ஜல்லி கற்கள் அதிக அளவில் அங்கும் இங்கும் சிதறி கிடக்கிறது. சாலையின் எதிர்புறம் வேகமாக வரும் வாகனங்கள் இதன் மேல் பயணம் செய்யும்போது நிலைதடுமாற இது காரணமாக அமையக்கூடும்.

குறிப்பாக அவ்வழியே ஸ்கூட்டரில் வரக்கூடிய பெண் வாகனஓட்டிகளுக்கு, சற்று வயதானவர்களுக்கும் இது சவாலாகவும் ஆபத்தாகவும் அமையலாம் எனவே இவ்விடங்களில் தேங்கியுள்ள கற்களை விரைந்து அகற்ற வேண்டும் என அவ்வழியே பயணிப்போர் தெரிவித்தனர்.
Previous

