கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கட்டி, பாலைமலை பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தீபாவளி கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆனைக்கட்டி கிராமத்து மக்களை காண வருவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். இங்குள்ள மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது முதல் பணி இந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதுதான்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து கொடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்று உறுதியளித்தார்.