2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் “மாற்றம் வேண்டும்” என சொல்லி வீட்டில் இருந்தவர்களை ஓட்டு போட வைத்தார்கள். ஆனால் த.வெ.க. ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்க கூடிய தவறான மாற்றம் என்று புரியும் படி மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கோவையில் திமுக தலைமையிலான அரசு நடைபெற்றபோது, பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்ட திட்டமிடப்பட்டு, பெருமளவு முடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்த நூலகம் முதலமைச்சர் விஜயால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நூலகத்தை கொண்டுவந்தது மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது தான் என்பதால் அவருக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா கோவை மாநகரத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கலைஞர் நூற்றாண்டில் தமிழகத்தின் பல நகரங்களில் நூலகங்கள் கொண்டுவர திட்டமிட்டு பணிகள் நடந்ததாக கூறினார்.

கோவையில் கலைஞர் பெயரிலேயே பிரம்மாண்ட நூலகம் அமைக்கலாம் என தன்னிடம் அமைச்சர்கள் சிலர் கூறியபோது, தான் சென்னையில் அண்ணாவின் பெயரில் நூலகம் உள்ளது, மதுரையில் கலைஞர் பெயரில் ஒன்று உள்ளது , ஆகவே கோவையில் தந்தை பெரியார் பெயரில் அமைப்போம் என கூறியதாக தெரிவித்தார்.
traikc scaled

மேலும் திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம் அமைக்கவும் தான் அறிவுறுத்தியதாக கூறினார். தாங்கள் சொன்னது போலவே செய்து காட்டியதாகவும் கூறிய அவர், அதைத் தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் நவீன நூலகங்கள் அமைக்கும் பணிகளை துவங்கினோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே இப்போது நடைபெறும் ஆட்சியில் திட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
vanquish scaled

தொடர்ந்து அவர், நெல்லை, கடலூர், சேலம் ஆகிய பகுதிகளில் நூலகங்களுக்கு அந்த சூழல் வராமல் வேகமாக பணிகளை முடித்து திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மற்றும் அவரின் அரசின் செயல்பாடுகள் பற்றி கடுமையாக விமர்சித்தார். ஜோதிடர் சொல்வதை முதலமைச்சர் கேட்டு நடப்பதாக விமர்சித்த ஸ்டாலின், இந்த ஆட்சியில் அதிகார மையங்கள் இருக்காது என முதலமைச்சர் விஜய் கூறினாலும், அவர் பின்னால் இருக்கக்கூடிய ‘கார்ப்பரேட் பவர் சென்டர்கள்’ தான் இந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கின்றனர் என்றார்.
pkpradhap scaled

இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சனையை அரசால் சரி செய்ய முடியவில்லை, செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி நாடகம் நடத்துகிறார்கள், திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அதைவிட இரண்டு மடங்கு அதிக விலைக்கு வெளி சந்தையில் மின்சாரத்தை வாங்குகிறார்கள் என தனது குற்றச்சாட்டை தொடர்ந்து அடுக்கினார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தொட்டு பல முக்கிய நகரங்களில் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என கூறிய அவர், கோவையில் ஒரு மாதத்தில் 10 கொலைகள் என கொலை நகரமாக கோவை மாறி இருக்கிறது என விமர்சனத்தால் விளாசினார்.

போதைப் பொருள் நடமாட்டம், பெண்கள் மற்றும் குழந்தைங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறை கைதிகள் தப்பிப்பது போன்ற சம்பவங்களை பற்றியும் அவர் தனது விமர்சன வரிசையில் பட்டியலிட்டார்.
dmktaos scaled

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே டாப்பில் இருந்தது தமிழ்நாடு, ஆனால் அது ஐந்தே மாதத்தில் தரை மட்டத்திற்கு சென்று விட்டது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றது என கூறினார். லாக்கப் மரணங்களை பற்றி முதலமைச்சர் வாய் திறக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தமிழ்நாட்டினுடைய நடுத்தர வர்கம் (‘மிடில் கிளாஸ்’) மற்றும் ஏழை மக்கள் மாதம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

த.வெ.க. ஆட்சியில் தமிழகத்தில்  ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது . கூடிய விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் தமிழ்நாட்டின் அறிவுலகத்திற்கு நல்லது என தனது கருத்தை காட்டமாக பதிவு செய்தார்.