கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான ‘ஸ்ட்ரைடு இண்டஸ்ட்ரி கனெக்ட் 2026’ நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, திட்டப்பணிகள், சான்றிதழ்கள், தொழிற்பயிற்சி அனுபவம், சாதனைகள், தகவல் தொடர்புத் திறன் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டன.
காக்னிசன்ட், தாட்வொர்க்ஸ், பேஒன், கோவன் லேப்ஸ், எக்ஸ்டெரோ, பெபகோரா, அவுல்சூர், ஸ்ட்ரீம் ஏ.ஐ., உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்ததுடன், வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
