தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வோர் நலன் கருதி 2,895 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.

எந்தெந்த ஊர்களுக்கு எந்த பேருந்து நிலையத்தை அணுகவேண்டும் ? 

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் : சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 1,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சூலூர் பேருந்து நிலையம் : சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூருக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

உக்கடம் மத்திய பேருந்து நிலையம் :  உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்ல 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா காலனி பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, குன்னூர், கூடலூர் செல்ல 195 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொள்ளாச்சி பேருந்து நிலையம்:  பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்:  மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் பகுதிகளுக்கு 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆகமொத்தம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பேருந்துகள் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 அல்லது 0422- 2306051 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.