கோவையில் நடைபெற்ற காமராஜர் கல்வித் திருவிழா மற்றும் ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவின் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் 250 மாணவ, மாணவியர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்பு விருதுகளை அமைச்சர் விக்னேஷ் வழங்கினார். மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கி, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.
கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியிடப்பட்டது. நூலை ஸ்ரீ ராம் பாலிமர்ஸ் நிர்வாக இயக்குநர் சாந்தாராம் வெளியிட, அதன் முதல் பிரதியை அமைச்சர் விக்னேஷ் பெற்றுக்கொண்டார்.
