இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பி.இ./பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வு தான் ஜே.இ.இ அட்வான்ஸ்டு. இந்தத் தேர்வில் பங்கேற்க, முதலில் ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

2026ஆம் ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் கட்ஆஃப் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவினருக்கும் (General, OBC, SC, ST உள்ளிட்டவை) தனித்தனியாக தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • பொது (UR) – 93.41
  • பொது (EWS) – 82.41
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (NCL) – 80.92
  • பட்டியல் சாதியினர் (SC) – 63.91
  • பழங்குடியினர் (ST) – 52.01
  • பொது (PwD) – 0.002

இந்தக் கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு தேதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறை, மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.