கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதனை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

முகாமில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும், பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. சர்க்கரை பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மற்றும் கொழுப்பு சத்து கண்டறிதல், கால் பாதம் பாதுகாப்பு பற்றிய ஆலோசனை, உடற்பயிற்சி முறைகள், உணவியல் ஆலோசனை மற்றும் பல்துறை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் பிரத்யேக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மூன்று மாத சர்க்கரை அளவு, கொழுப்பு சத்து, மற்றும் எஸ்.யுஏ போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டது.

கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு கோவை பொன்னம்மாள் துரைசாமி மருத்துவமனையில இலவச கண்புரை சிகிச்சை செய்யப்பட்டது. தேவைப்படுவோருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.