கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை வளாகத்தில், பிரண்ட்ஸ் வாக்கிங் கிளப் சார்பில், பொதுமக்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள 8 ட்ராக் நடைபயிற்சி வசதி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு பாராட்டினார். இதேபோன்று மற்றொரு இடத்திலும் 8 ட்ராக் நடைபயிற்சி வசதி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்க பரிந்துரை செய்தார்.

1. walking club 1 scaled

மேலும், ரேஸ்கோர்ஸ் நடைபாதை வளாகத்தில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் 4 இடங்களில் நிழற்குடைகள் அமைத்துத் தர வேண்டும் என்ற கிளப் உறுப்பினர்களின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார். இதற்குத் தேவையான ஆவணப் பணிகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது மத்திய மண்டல துணை ஆணையாளர் கணேசன் உடனிருந்தார்.

1a 6 scaled