இந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஹெல்த் சயின்ஸின் ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி துறை சார்பில், ரேடியாலஜி தினத்தை முன்னிட்டு “தி மிஸ்டரி ஆஃப் சீயிங் தி அன்சீன்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்துஸ்தான் மருத்துவமனையின் ரேடியாலஜி துறைத் தலைவர் டாக்டர் சங்கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் முழுநேர பிஎச்.டி. ஆராய்ச்சி மாணவி மோகனா பிரியா சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ரேடியோகிராபர்களின் பங்கு குறித்து பேசினார்.

8a 4 scaled

கல்லூரியின் முதல்வர் அருண்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, மாணவர்கள் மருத்துவ இமேஜிங் துறையில் தங்களது தொழில்நுட்ப அறிவையும் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் மாணவர்களின் கல்விசார் விளக்கவுரைகள் மற்றும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.