இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குவி ஹெச்.சி.எல் (GUVI – HCL) குழும நிறுவனம் இடையே, கல்வி மற்றும் தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதன் மூலம் தொழில்துறை சார்ந்த பாடத்திட்டங்கள், ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், டிஜிட்டல் கற்றல் தளங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் நடராஜன் மற்றும் குவி ஹெச்.சி.எல் குழும நிறுவனத்தின் நிறுவன விற்பனைத் தலைவர் வினோத் ஸ்ரீனிவாசன் கையெழுத்திட்டனர்.

நிகழ்வில் பேசிய கல்லூரி முதல்வர் நடராஜன், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதில் இந்த கூட்டாண்மை முக்கிய பங்காற்றும் என்றார்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் ஜமீர் பாஷா, இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த கற்றல், சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.