கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கான சிறப்பு வெறிநோய் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது.
மாநகராட்சி சார்பில் நேற்று ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ஒருங்கிணைந்து தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி செலுத்திய பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடுவித்தனர்.
தெருநாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வெறிநோயை தடுப்பதற்காக, மாநகரம் முழுவதும் விரிவான தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகின்றது.
