கோவை குறிச்சி குளம் அருகே 1,330 தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வளாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
உலகத்திற்க்கு உயர்ந்த கருத்துக்களை, வாழ்க்கை பாடங்களை 1,330 குறள்களில் வகுத்துத்தந்த வள்ளுவருக்கு இப்படி ஒரு சிலை வேறு எங்கும் நிறுவப்பட்டது இல்லை. ஜனவரி 2024ல் இந்த சிலை திறக்கப்பட்டது.
இந்த சிலை திறக்கப்பட்டபோது இந்த வளாகம் மக்களை அதிகம் ஈர்க்கும் இடமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த இடம் இன்று பரிதாபகரமாக உள்ளது.
குளத்தை சுற்றி உள்ள செடிகள் சரியாக வெட்டப்படாமல் அங்கும் இங்கும் புதர்கள் உருவாகி உள்ளன. ஒருபக்கம் சகதியும், மறுபக்கம் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகளும் சூழ்ந்துள்ளன.
2026 திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவருக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட்டது, ஆனால், சிலை அமைந்துள்ள வளாகம் அன்றும் கவனிக்கப்படவில்லை, இன்றும் அப்படியே நிலைமை தொடருகிறது.

