கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும், குடிநீர் தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மண்டல வாரியான பிரத்யேக உதவி எண்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, குழாய் உடைப்பு அல்லது விநியோகச் சீர்கேடுகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க இனி அலைய வேண்டிய அவசியமில்லை. மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி, 81900 00200 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகார்களை மெசேஜ் மூலம் அனுப்பலாம்.
மண்டல வாரியான தொடர்பு எண்கள்:
வாட்ஸ்அப் வசதி மட்டுமின்றி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாகத் தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த மண்டல அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கீழ்க்கண்ட எண்களைப் பயன்படுத்தலாம்:
வடக்கு மண்டலம்: 89259 75980
மேற்கு மண்டலம்: 89259 75981
மத்திய மண்டலம்: 89259 75982
தெற்கு மண்டலம்: 90430 66114
கிழக்கு மண்டலம்: 89258 40945
குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் பகுதி குடிநீர்ச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

