கோவை குறிச்சி நன்னலம் அறக்கட்டளையின் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை குறிச்சி பகுதியைச் சுற்றி இருக்கிற ஏழு அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதியும், தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான முகமது ஜியாவுதீன்  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அவர் பேசியதாவது: கல்வி தான் சமுதாயத்தை மாற்றும் கருவி. ஏழை மாணவர்கள் படிக்க உதவுவதே இறைவனுக்கு பிடித்த வழிபாடு.

இங்கிலாந்தில் இரண்டு சிறுவர்கள் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருக்கிற போது ஒரு சிறுவன் புதைகுழியில் விழுந்த நேரத்தில் எல்லோரும் காப்பாற்ற அஞ்சிய போது ஆடு வைத்துக் கொண்டு இருந்த  சிறுவன் உள்ளே குதித்து காப்பாற்றுகிறார்.

குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்த பிரபு அந்தஸ்தில் இருந்த காப்பாற்றப்பட்ட சிறுவனின் தந்தை, ஏழை சிறுவனை அழைத்து தன் மகனைக் காப்பாற்றியதற்காக என்ன பரிசு வேண்டும் என கேட்டபோது, அந்த ஏழைச் சிறுவன் படிப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அப்படி படிக்க வைக்கப்பட்ட சிறுவன் தான் பின்னாளில் 20 கோடி மக்களைக்கு காப்பாற்றிய பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்த பெஞ்சமின் ஃபிராங்ளின். காப்பாற்றப்பட்ட சிறுவன் தான் இங்கிலாந்தின் பிரதமராக பாசிசத்தைத்திற்கு எதிராக வெற்றி கண்ட வின்ஸ்டன் சர்ச்சில். ஏழைகளுக்கு படிக்க உதவினால் அவர்கள் வளர்ந்து எல்லோருக்கும் உதவுவார்கள்.

ஒரு ஏழை மாணவன் உலகம் வியக்கும் உயர்ந்த இடத்திற்கு உயர்வதற்கு மூன்று நபர்கள் காரணம் என்று ‘அக்கினிச் சிறகுகள்’ புத்தகத்தில் அப்துல் கலாம்  குறிப்பிடுகிறார்.