கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சிக்னலுக்கு அடுத்து உள்ள சந்திரா ஹூண்டாய் மற்றும் ஜோன் ஹோட்டல் எதிரே அமைந்துள்ளது ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு மருத்துவமனை.
இதன் அருகே வரக்கூடிய சாலை ஒன்றில் மிகப்பெரிய குழி உருவாகி உள்ளது. லட்சுமி மில்ஸ் சாலையை கடந்து பிற இடங்களுக்கு செல்லும் ஒரு பிரிவினர் இவ்வழியே நடந்து செல்வது வழக்கம்.
பாதசாரிகள் பலரும் வரக்கூடிய இவ்வழியில் இப்படி ஒரு குழி இருப்பது ஆபத்து. மேலும் மழை கால நாட்களில் தண்ணீர் சாலை ஓரம் தேங்கினால் இந்த குழி இருப்பது தெரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். எனவே பொதுமக்கள் கவனத்துடன் செல்லவேண்டும். இதை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையை விரைவு படுத்தவேண்டும்.

