ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக உலக மனிதவள மேம்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் ஓய்வுபெற்ற உதவி கணக்கு கட்டுபாட்டாளர் ராணி குணசேகரன் கலந்துகொண்டு, துறை ரீதியாக சிறப்பாக பணியாற்றிய 70 பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
நிகழ்வில் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மனிதவள மேம்பாட்டுதுறை தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டனர்.

