சரவணம்பட்டி புரோஜோன் மாலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 7 முதல் 16 ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்று (மார்ச் 9) ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) கண்கவர் நிகழ்வாக நடைபெற்றது. ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் நடைபெற்ற ‘ஃபேஷன் டெஸ்ட் 2025’ நிகழ்ச்சியில் 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்று தங்களது ஆடை அலங்கார திறமைகளை வெளிப்படுத்தினர்.

prozone

நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட டிசைனர்கள் பங்கேற்று தங்களது புதிய ஆடை வடிவங்களை வெளியிட்டனர். 130-க்கும் மேற்பட்ட ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 40 வகையான போட்டிகள் நடைபெற்றதுடன், முன்னணி நடன இயக்குநர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட அலங்கார நிபுணர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் திருமதி. சுகுணா செய்திருந்தார். போட்டியில் பங்கேற்ற பெண்கள் ஓய்யாரமாக மேடையில் நடைபோட்டது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெரிய எண்ணிக்கையில் மக்கள் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.