சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் கீரணத்தம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

7. kanimozhi scaled

நிகழ்வில் அவர் பேசியதாவது: பண்டிகை என்றால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். ஆனால், தவெக ஆட்சியில் எங்களைப் பொறுத்தவரை உங்களைப் போன்ற உழைப்பாளர்கள்தான் முதலில் நினைவுக்கு வருகிறீர்கள். உங்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம்.

நீங்கள் சாதாரணப் பணியாளர்கள் அல்ல; நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மைத் தேவதைகள். உங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் செய்யும் பணியை வேறு யாராலும் எளிதில் செய்துவிட முடியாது. உங்கள் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எனது தலைவணங்கிய சல்யூட். என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.