ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அவதார பெருவிழா, கோவை ராம் நகர் ஐயப்பா பூஜா சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை, கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுல ஆச்சார்யா ஸதாத் மானந்தா சரஸ்வதி வழங்கினார்.

தர்ம சிந்தனை சமிதி நிறுவனர் ஸ்ரீஜகதாத்மானந்தா தலைமை தாங்கி பேசியதாவது. தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அவதாரப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஆன்மீகம் தழைக்க வேண்டும், தர்மம் நிலைக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உள்ளோம்.

3. a 1 scaled

தொடர்ந்து இந்த சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குரு வழி வகுத்து கொடுத்த பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம் என்று கூறினார்.

விழாவில் ஆனைகட்டி மலைவாழ் மக்களின் பக்தி இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.