சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான ‘சுகுணா பிரீமியர் லீக் சீசன் 9’ கிரிக்கெட் போட்டிகள் புதன்கிழை தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டியில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்களது கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

5. suguna 1 scaled

நிகழ்வில் சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, தாளாளர் சுகுணா லக்ஷ்மிநாராயணசாமி, இயக்குநர் சாந்தினி அனீஸ் குமார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜாலு மற்றும் டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5. a 2 scaled

சிறப்பு விருந்தினராக டி.என்.பி.எல் வீரரும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வீரருமான சேனாதிபதி கபிலீஸ்வரன் கலந்து கொண்டார். இதனுடன், சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் நான்கு ஹவுஸ் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.