கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஊழியர் மன்றத்தின் சார்பில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகின்ற தீபம் மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்கள், ஊழியர்கள் பங்கேற்றுப் பரிசோதனை செய்தனர்.

16a scaled

மருத்துவப் பரிசோதனை முகாமை கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ.வாசுகி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சங்கீதா முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய, எக்கோ மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ முகாம் ஏற்பாடுகளைக் கல்லூரியின் ஊழியர் மன்றத்தின் தலைவர் முத்துக்குமார், செயலாளர் சரவணக்குமார், துணைத்தலைவர் ரேவதி உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் செய்தனர்.  முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர்.