கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் உருவெடுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையம் மிக முக்கியமான மைல்கல்லாக தொடங்கப்பட்டது.

இந்த மையம் சிங்கப்பூர்அலிபாபா கிளவுட், கோயம்புத்தூர்ஆல்ரியல் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எக்ஸ்.டி. ஐ.சி- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மதராஸ் (ஐ.ஐ.டி.எம்) ஆகிய நிறுவனங்களுடன் கூட்டாண்மையில் நிறுவப்பட்டுள்ளது.

இம்முயற்சி மாணவர்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங், தானியங்கி நுண்ணறிவு (AI), மற்றும் விஆர்/ஏஆர்/எக்ஸ்ஆர் போன்ற துறைகளில் மேம்பட்ட அறிவை வழங்கி புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்கும்.

திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக எஸ்.என்.ஆர் & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் பங்கேற்றார். மேலும், எக்ஸ்.டி. ஐ.சி-ஐ.ஐ.டி.எம்-யின் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஆல்ரியல் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் துணை நிறுவனர் நிவேதிதா மற்றும் சிங்கப்பூர்அலிபாபா கிளவுட் டின் மூத்த பயிற்சி ஆலோசகர்பெர்டின் ஜோ ஜான் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து,கணேஷ் பேசுகையில்,கல்வி மற்றும் தொழில்துறை இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் திட்ட அடிப்படையிலான கற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தினார். மாணவர்கள் உண்மையான உலகச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்பு மற்றும் அனுபவமிக்க கற்றல் முறைமைகள் கல்விக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

புதிய மையம் அறிவு பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, மற்றும் நடத்தை அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கான உயிருடையான ஒருங்கிணைப்பு மேடையாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவர்களை தொழில்துறை-தயார், நவீன தன்மை கொண்ட தொழில்முனைவோர்ஆக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.