2026 கோடை காலம் என்பது கோவை மாநகரில் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. வெப்பம் அதிபச்சம் 39 ° செல்ஸியஸ் வரை சென்றுள்ளது.
காலை மாலை மட்டுமல்ல இரவு நேரங்களில் கூட வெப்பம் நீடிப்பதால் சரியாக தூங்க முடியாமல் தவிக்கும் நிலைமை மாநகரில் ஏற்பட்டுள்ளது. “எங்கப்பா அந்த கோடை மழை?” என மக்கள் தேடும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் (26.4.26 முதல் 2.5.26) வானிலை நிலவரம் மாநகரில் எப்படி இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய் – யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
நாளை (28.4.26) முதல் கோவை மாநகரில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள இடங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
மாநகரில் வெப்பம் வார இறுதியில் இருந்து படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதிகபட்ச வெப்பம் 37° செல்ஸியஸ் என்ற நிலைக்கு செல்லும். மேலும் மாநகரில் வார இறுதி நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இரவு நேரங்கள் சௌகரியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
