கோவை வ.உ.சி., மைதானத்தில் வியாழன் அன்று தமிழக செய்தி – மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசு பொருட்காட்சி கோலாகலமாக துவங்கியது.

 

இதன் துவக்கவிழாவில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத் குமார் உடன், பள்ளி கல்வித்துறை & செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

Porutlaunch scaled45 நாட்கள்  நடக்கின்ற இந்த பொருட்காட்சியில், கோவை மக்கள் மகிழும் வண்ணம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Kaalalma scaledமேலும் இப்பொருட்காட்சியில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 29 அரசுத் துறைகள் சார்பில் அரங்குகள் இடம்பெறுள்ளன. இத்துடன் வேடிக்கை, விளையாட்டு, உணவு ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.

Ellaoorl scaledபொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அரங்குகளை, பல்வேறு அம்சங்களை பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Akkaange scaled

Irauvadh scaled