கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவை நகைச்சுவை சங்கம் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

“மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாய் இருப்பது வீட்டிலா? வெளியிலா?” என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பேராசிரியர், கு. ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்றார்.

பட்டிமன்றத்தில், இரு அணிகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் முனைவர் குரு ஞானாம்பிகை, கபிலா விசாலாட்சி வீட்டிலேயே மகிழ்ச்சியாய் இருப்பதாகவும், செல்லகண்ணன், நாகமுத்து பாண்டியன் ஆகியோர் வெளியிலேயே மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் நகைச்சுவையுடன் கருத்துகளை முன்வைத்து பேசினர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிரித்து மகிழ்ந்தனர்.
