சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் மாபெரும் விவசாய வேளாண் தொடர்பு முகாம் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை பிராந்திய தலைவர் ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் சந்தோஷம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடன் முகாமில் பல்வேறு வேளாண் கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.20 கோடி மதிப்பிலான கடன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.
