மருத்துவச் சேவையை மனிதநேயத்துடன் அணுகி, ஆயிரக்கணக்கானோர் நலம்பெற வழிகாட்டியவர் கங்கா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன். இன்று (அக்டோபர் 30) அவரது பிறந்த நாள் நினைவஞ்சலி ஆகும்.
மருத்துவம் என்பது தொழில் மட்டுமல்ல, மனிதநேயத்துடன் கூடிய சேவை என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் வலியுறுத்தியவர் டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன்.
“முதலில் மருத்துவம், பிறகு செலவினம்; முதலில் மனிதம், பிறகு லாபம்” என்ற உயரிய கொள்கையை வலியுறுத்தி, நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மருத்துவச் சேவைக்கு வழிகாட்டியவர்.
ஒவ்வொரு நோயாளிக்கும் கண்ணியத்துடனும் அக்கறையுடனும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.
அவர் கற்றுத்தந்த கொள்கைகளும், நோயாளிகளைக் கண்ணியத்துடன் அணுகும் சேவை மனப்பான்மையும்
கங்கா மருத்துவமனைக்கு வழிகாட்டி வருகின்றன.
