ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “சர்க்கரைக்கு இனி அக்கறை காட்டுவோம்” என்ற 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சி 3வது வருடமாக இன்று ஜி.கே.என்.எம். வெளி நோயாளிகள் மருத்துவ மையத்தில் துவங்கியது.

மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, பி.எம்.ஐ பரிசோதனை, கண் பரிசோதனை, நீரிழிவு பாத பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன.

18 c scaled

மருத்துவ உணவியல் ஆலோசனை மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கும் உணவுக் கண்காட்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.

நிகழ்வில் மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் சுந்தரராஜன், ஜி.கே.என்.எம். வெளி நோயாளிகள் மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராகவேந்திரா, மருத்துவ விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் ஆகியோருடன், நாளமில்லா சுரப்பியியல் மற்றும் சர்க்கரை நோய் துறை ஆலோசகர்கள் டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் நிகில் சஞ்சீவ், சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு சிறப்பு ஆலோசகர் டாக்டர் முத்துலட்சுமி, மாற்று மருத்துவத் துறை மருத்துவர்கள் டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் டாக்டர் காந்தி, பிசியோதெரப்பி மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் மகேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

18a scaled

இக்கண்காட்சி நாளை (நவ. 21) வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜி.கே.என்.எம். வெளி நோயாளிகள் மருத்துவ மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும்.