சிக்கிம் பல்கலைக்கழகம் – ‘பிரைட் ஆஃப் பிரஸ்டீஜ்’ விருதுகள் அங்கீகாரக் கூட்டமைப்பு – ஆசிய விருதுகள் (தமிழ்நாடு) இணைந்து நடத்திய தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழா கோவை கோஇந்தியா கலை அரங்கில் நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிறுவனர் கெளரி சங்கரின் 30 ஆண்டுகால தொடர் சமுதாய பணிக்கு, டாக்டர் ஆஃப் சோசியல் சர்வீஸ் என்ற கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை சிக்கிம் பல்கலைக்கழகம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் மகேந்திரகுமார், அருண்குமார், சதீஷ், அரவிந்குமார், கலாபிரியா குமரேசன் உள்ளிட்டோர் வழங்கினர்.