தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழை மற்றும் கறிவேப்பிலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வரும் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் நடைபெறும்.

வாழைப் பொடி, வாழை ஐஸ் கிரீம் மிக்ஸ், வாழைப் பழ ஜாம், வாழைப்பூ ஊறுகாய், வாழைத் தண்டு மிட்டாய், வாழை சத்து மாவு, கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை பேஸ்ட், கறிவேப்பிலை சாத பொடி, ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.