சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல்லூரியின், தமிழ்த்துறையின் இளந்தென்றல் இலக்கிய வட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஜெமிமா தலைமை தாங்கி மொழித் துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்றத் தலைவர்களுக்குப் பேட்ஜ் அணிவித்தார்.

சிறப்பு அழைப்பாளராக நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி கலந்து கொண்டு பண்பாட்டுக் கட்டமைப்பு எனும் தலைப்பில் பேசினார். நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஐரீன், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.