தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் உள்ளது என குற்றஞ்சாட்டி, அரசுக்கு எதிராக இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் அதிமுகவின் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கோவையில் இந்த ஆர்ப்பாட்டம் நெஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.

இதில் அதிமுக-வை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோவை புறநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் செ.ம.வேலுசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வங்கியில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மேகதாது பிரச்சனையில் தமிழகத்திற்கான பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

