தமிழக முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்றான அண்ணன் சீர் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவற்றை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?
திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம். அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளம் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களுக்கான செயல்முறை
விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும். தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.
