பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324- சி, கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் இணைந்து, சர்வதேச கல்வி தினம், தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் தேசிய கீதமாக ஜனகணமன பாடல் அறிவிக்கப்பட்ட தினம் ஆகியவற்றை முன்னிட்டு, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று பிரியாணி வழங்கும் நிகழ்வு நேரு நகர் லயன் சங்கத்தின் தலைவர் சுப்பு செந்தில்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை(24-01-2025)காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வெஜ் பிரியாணி, முட்டை, மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இரண்டாம் துணை ஆளுநர் லயன் செல்வராஜ், நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாஸ்கரன், கோவில் கருப்ப கவுண்டர் அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மாணவருமான சுகுமார், பார்க் மாவட்டத் தலைவர் லோகநாதன்,  8வது வார்டு மாமன்ற உறுப்பினரும், முன்னாள் மாணவருமான விஜயகுமார், பசிப்பிணி போக்குதல் மாவட்ட தலைவர் மெய்யழகன் மற்றும் ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிச்செல்வி மற்றும் லயன் சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.