கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு செய்யும் விதத்தில் மாபெரும் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.
சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமை உரை வழங்கினார். இணைச்செயலாளர் லோகநாதன் அறிமுக உரை வழங்கினார். இதை அடுத்து சிறப்பு விருந்தினர் அண்ணாமலை சாதனை மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றினார்.

தொடர்ந்து 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த இரண்டு தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை அண்ணாமலையுடன் இணைந்து சக விருந்தினர்கள் வழங்கினர்.

நிகழ்வில் கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர்கள் – ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன், இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், டாலர் குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி மற்றும் ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பழனிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் இறுதியில் கொங்கு நண்பர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி உரை வழங்கினார்.
