கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து மருத்துவர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளையும், அதை சரிபடுத்தக்கூடிய வழிமுறைகளையும் பற்றி, நிர்வாகத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் விமல்குமார் எடுத்துரைத்தார். பொது மேலாளர் சோமசுந்தரம், போதைப் பழக்கத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளையும், அரசுக்கு உறுதுணையாக இருப்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

செவிலியர்களின் தலைமை சரவணப்பிரியா, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியையும், அதிலிருந்து மீண்டு வருவதற்கு எப்படி துணையாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்தார்.
