கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் காஞ்சிபுரம் ‘பச்சையப்பாஸ் சில்க்ஸ்’ வியாழக்கிழமை கோலாகலமாக திறக்கப்பட்டது. பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் சுந்தர் கணேஷ், நிர்வாக இயக்குனர் பிரபு பச்சையப்பன், இயக்குனர்கள் வசந்த ராஜ், முகேஷ் ராஜ், ஜெகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன், கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுண்ட், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன், எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


1926 முதல் மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமான காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவண்ணாமலையை தொடர்ந்து தற்போது கொங்கு மண்டலத்திலும் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கோவையில் பச்சையப்பாஸின் 6வது கிளை திறக்கப்பட்டுள்ளது.
