கோவையில் நேற்று பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட குனியமுத்தூர் இ.பி.காலணி பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
satba scaled

கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகில் உள்ள இ.பி.காலணி பகுதியில் மழைநீர் வடியாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மக்களின் உடமைகளும், உணவுப் பொருட்களும் சேதமடைந்தன.

தகவலறிந்ததும் உடனடியாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழைநீர் புகுந்த இ.பி.காலணி பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
SPVELUMANSS scaled
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் தடுப்புச் சுவர் மழைநீரில் நனைந்து இடிந்து விழுந்ததால், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்த பகுதியையும் அவர் பார்வையிட்டார்.

இந்த விபத்து குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வரவழைத்த எஸ்.பி.வேலுமணி அவர்கள், மழைநீர் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்புச் சுவர் இடிந்த விவகாரம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் சுட்டிக்காட்டி, விரைவான முறையில் மீட்புப் பணிகளையும், சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் மதனகோபால், 92-வது வார்டு செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை உடனுக்குடன் அகற்றுவதற்கான நிரந்தரத் தீர்வுகளைக் காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.