இன்று (3.8.26) முதல் இந்த வார இறுதி வரை கோவை மாநகரில் வானிலை கொஞ்சம் மழை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய் கூறியதாவது:-

அடுத்த 3-4 நாட்கள் கோவை மாநகரில் கோவையின் வடக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே மிதமான மழை (வெப்பசலன மழை) சூழல் நிலவ வாய்ப்புள்ளது. அதுவே வார இறுதியில் மாநகரில் பரவலாக சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை, 33° செல்சியஸ் வரை இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.