கோவை, மாதம்பட்டி குப்பனூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அன்பாலயம் மறுவாழ்வு மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையற் கூடம், உணவு அருந்தும் பெரிய அறை ஆகியவை ஏறத்தாழ 60 குடியிருப்பு வாசிகளுக்காகத் திறக்கப்பட்டது.

ஸ்ரீசெண்பக லிங்கேசுவர பொது அறக்கட்டளையின் தலைவர் நடராசன் திறந்து வைத்தார். அன்பாலயத்தின் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரீகலா கலந்து கொண்டார்.

இக்கட்டடம் 521 சதுர அடி பரப்பளவில் உணவு அருந்தும் கூடமும், சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு அதிக அழுத்தம் கொண்ட பர்ணர்களும், சாமான்கள் வைப்பு அறையும், குடிநீர் குழாய்கள் மற்றும் உணவு பரிமாறுவதற்குத் தேவையான பாத்திரங்களும் நவீன முறையில் அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பாப்காக் பவர் ஏபிஏசி பிரைவேட் லிமிடெட் நடராஜன், ராகவன், சுபா ஆகியோர் நன்கொடையாக வழங்கிய ரூ.12.05 லட்சம் தொகையைக் கொண்டு இந்த வேலைகள் செய்யப்பட்டன.