கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியில், இந்துஸ்தான் சுகாதார அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் பங்கேற்றனர். கொசுக்கள் உற்பத்தியை தடுத்தல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
