வருடம் முழுவதும் நன்மையை தந்த இறைவனுக்கு கிறிஸ்துவர்களால் நன்றி செலுத்த கடைபிடிக்கப்படும் பண்டிகை அறுவடை திருநாள் எனப்படும் ‘ஹார்வெஸ்ட்’ பண்டிகை.

கோவை மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் அறுவடை திருநாள் பண்டிகை சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவை பேராசிரியர் நிர்மல் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். அவருடன் ஆயர்கள் ராபின்சன் பிரபாகரன், கருணாகரன், ஜெபதுரை, பொருளாளர் ஆனந்த ஆசீர், திருமண்டல உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானப்பிரகாசம் மற்றும் சபை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இறைவனுக்கு தங்களது காணிக்கைகள் நன்றி தெரிவிக்கும் விதமாக செலுத்தி மகிழ்வுடன் திருவிழாவை திருச்சபை மக்கள் கொண்டாடினர்.