கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில், கைத்தறி ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ஐடியாமேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், ஃபேஷன் டிசைனர், ஜான் பீட்டர், மக்கள் சேவை மையம் உறுப்பினர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர். கைத்தறி ஆடைகளின் பாரம்பரியம், கைவினை நுட்பம் மற்றும் நவீன வடிவமைப்புகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்கள் வடிவமைத்த ஆடைகளுடன் அணிவகுப்பு நடைபெற்றது.
