ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநர் கலைச்செல்வன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 375 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீராம், துணை முதல்வர் கோபால் ராவ் கலந்துகொண்டனர்.
