சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “இன்றைய இளைஞர்களின் வளர்ச்சிக்குக் காரணம் வீடா? நாடா?” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளரான கவிஞர் கோவை தனபால் கலந்து கொண்டு, இன்றைய இளைஞர்களின் வளர்ச்சியில் குடும்பம், சமூகம், கல்வி மற்றும் நாட்டின் பங்கு குறித்த சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்.