துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாநகருக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன், உப்பிலிபாளையம், பந்தயசாலை, அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ஆளில்லா வான்வழி அமைப்பு, ட்ரோன்கள் பறப்பதற்கு ஜூலை 23ம் தேதி காலை 11 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
