சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர், ‘உலக அமைதி காப்போம்!’ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் பகுதியில் தொடங்கி பள்ளியின் விளையாட்டு மைதானம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் நடைபெற்ற ஓட்டத்தினை, மேட்டுப்பாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ மாணவியர் சுமார் 800 பேர் மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.

running 2 scaled

மேட்டுப்பாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பேசுகையில்: இன்றைய காலகட்டத்தில் உலகம் எவ்வளவு வேகமாகப் போகிறதோ அந்த அளவிற்கு நம் உடல்நிலையையும் நன்றாகப் பேணிக் காக்க வேண்டும். அதற்குத் தினந்தோறும் ஓடுகின்ற பயிற்சியில் தவறாமல் இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். உடல் நன்றாக இருந்தது என்றால் கண்டிப்பாக  வாழ்க்கையில் நினைத்த இடத்திற்கும் உயர்நிலையை அடைவதற்கும் சிறந்த சூழ்நிலை உருவாகும் என்று பேசினார்.

running 3 scaled

பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: வெற்றி அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களைத் தோற்கடிப்பது என்பது பொருளல்ல. நம்மை நாம் முன்னேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவர்களைத் தோற்கடிக்கும் எண்ணத்தை நமது மனமும் மூளையும் சிந்திக்க வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) சதீஷ் பாபு, பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.