கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2026 வெள்ளிக்கிழமை கொடிசியா அரங்கில் கோலாகலமாக துவங்கியது.

IMG 20260718 WA0005

ஜூலை 17 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு இலக்கிய பிரிவுகளின் கீழ் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன. இதை வரும் 26 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை பொதுமக்கள் கண்டு கழிக்க முடியும்.

IMG 20260718 WA0001

துவக்க விழாவில் எழுத்தாளர் ரத்தினம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கொடிசியா தலைவர் ரங்கசாமி, கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நிகழ்வின் தலைவர் ராஜேஷ் மற்றும் கொடிசியா கௌரவ செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் கோவை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ராணி காஞ்சனா வழங்கினார்.

IMG 20260718 WA0002

இதைத் தொடர்ந்து இளம் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆரணங்கு நூலின் எழுத்தாளருக்கு கிருஷ்ணமூர்த்தி நான்மாடக்கூடல் புத்தகத்தின் எழுத்தாளர் ஆனந்த் பிரபு, மற்றும் எழுத்தாளர் மந்திரி குமார் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

IMG 20260718 WA0003